Friday, January 15, 2010

உலகம்

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:



''உலகம், இறை விசுவாசிகளுக்கு சிறைச்சாலையாகும். இறை மறுப்பாளர்களுக்கு சொர்க்கம் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 470)





இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு, ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்'' என்று கூறினார்கள். ''நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.'' (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 471)



நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:



''உலகத்தின் பயனை மக்கள் பெற்றுக் கொண்டது குறித்து நினைவு கூர்ந்த உமர்(ரலி) அவர்கள், அன்றைய நாளில் பசி காரணமாக சாய்ந்த நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்டுள்ளேன். அவர்கள் தன் வயிற்றை நிரப்பிட மட்டமான பேரீத்தம் பழத்தைக் கூட பெற்றுக் கொண்டதில்லை'' என்று கூறினார்கள். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 473)



அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நீங்கள் சொத்துக்களை (கவனத்தில்) எடுத்துக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் பேராசைக்காரர்களாகி விடுவீர்;கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 479)



''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)





'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

____________ _________ _________ _______


NANDRI: SATHYAPATHAI GROUP

Wednesday, January 13, 2010