Tuesday, November 10, 2009

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

(அபூஸைத் என்ற) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

'மறுமையில் ஒருவர் அழைத்து வரப்பட்டு, நரகிலும் போடப்படுவார். அப்போது அவரின் வயிற்றுக் குடல்கள் சரிந்து விடும். அவர் அந்த நிலையிலேயே கழுதை செக்கைச் சுற்றுவது போல் சுற்றுவார். அவரிடம் நரகவாசிகள் அனைவரும் வந்து, இன்னாரே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ நல்லதை ஏவி, தீயதை விட்டும் தடுத்துக் கொண்டு இருந்தீர்தானே? என்று கூறுவார்கள். அதற்கு அவர், ஆம் நல்லதை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்ய வில்லை. தீயதை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை நான் செய்தேன்'' என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 198)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும் 1) பேசினால் பொய் பேசுவான் 2) வாக்குறுதி அளித்தால் மாறு செய்வான் 3) அவனை நம்பினால் மோசடி செய்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 199)


ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதம் என்பது, மறுமை நாளின் இருள்களில் உள்ளதாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். கஞ்சத்தனம் தான், உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்தது. மேலும் அது (கொலை மூலம்) இரத்தங்களை ஓட்டிடவும், தடுக்கப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை தூண்டியது.'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 203)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''